லண்டன்: பாலஸ்தீனம் தனிபிரதேசமாக இருந்தாலும், உலக நாடுகள் அதனை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த சூழலில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முறையான அறிவிப்பை இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் நேற்று வௌியிட்டார்.
இதேபோல் கனடா பிரதமர் மார்க் கார்னி தன் எக்ஸ் பதிவில், “காசாவில் அமைதிக்கு வழி வகுக்கும் என்ற அடிப்படையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக கனடா அங்கீகரிக்கிறது” என தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வௌியிட்ட அறிக்கையில், “ஞாயிற்றுக்கிழமை(செப்.21) முதல் சுதந்திர நாடு பாலஸ்தீனம் என்பதை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது” என கூறி உள்ளார்.