பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் நேற்று நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.2 கோடியே 81 லட்சத்து 16 ஆயிரத்து 256 கிடைத்தது. இதுதவிர தங்கம் 5,005 கிராம், வெள்ளி 11,438 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,324 ஆகியவை கிடைத்தன. இம்முறை தான் தங்கம் அதிகளவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு கிலோ தங்கக்கட்டிகள்- 2, நூறு கிராம் தங்கக்கட்டிகள்- 23 போன்றவையும் அடக்கம்.
+
Advertisement