திண்டுக்கல்: பழனியில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி ரூ.6 கோடி மோசடி செய்த புகாரில் தம்பதி கைது செய்துள்ளனர். செந்தில்குமார், ஜெயந்தி தம்பதி, சக்திவேல் சேர்ந்து ஸ்ரீநேசா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தியுள்ளனர். உண்டு உறைவிடப் பள்ளி நடத்தி வருவதாகவும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் கூறி மோசடி செய்துள்ளனர். தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் தந்தால் மாதம் 2% வட்டி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர். மோசடி வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ளவர்களுக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
+
Advertisement