நெல்லை: தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைகுமார் (39) என்பவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று சிறை வளாகத்தில், அவரது பிளாக் அருகே உள்ள குளியலறையில் தான் அணிந்திருந்த லுங்கியில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
+
Advertisement


