Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது: உளவுத் துறையினர் விசாரணை

ஜம்மு காஷ்மீர்: இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த சிராஜ்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு அருகே உள்ள ஆர்.எஸ் புரா எல்லையில் சிராஜ்கான் பிடிபட்டுள்ளார். இவர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்யும் போது (பார்டர் செகுரிட்டி போர்ஸ்) என அழைக்கப்படும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் இவரை கைது செய்தனர். இவரிடம் தற்போது விசாணை நடந்து வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் இவர் பாகிஸ்தானில் உள்ள பர்கோதா பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இவர் எதற்காக இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டார் என்பது குறித்து உளவுத்துறை, காவல்துறை மற்றும் எல்லையோரம் பணிபுரியும் ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரிடம் பாகிஸ்தான் கரன்சி நோட்டுகள் இருந்துள்ளது. அத்துடன் விசாரணையில் இவர் எதற்காக இங்கே வந்தேன் என்பதை கூறியுள்ளார். பின்னர் வழிதவறி வந்துவிட்டதாக கூறினார்.

இப்படி பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளார். இவர் ஏதேனும் நாச வேளையில் ஈடுபடுவதர்கோ அல்லது உளவு வேளைகளில் ஈடுபடுவதற்கோ தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு அளிப்பதற்கு இவர் இங்கு கூடி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் எல்லை, பாதுகாப்பு பணி அல்லது ஐஎஸ்ஐ இருக்கிறதா என்பதையும் தற்போது உளவுத்துறையினர், காவல்துறையினர் எல்லையில் பணிபுரியும் ராணுவத்தை சேர்ந்தவர்களும் விசாரித்து வருகின்றனர்.