ராவல்பிண்டி: பாகிஸ்தான்-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் வென்ற நிலையில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் பாபர் அசாம் நாட் அவுட்டாக 102, ஃபகார் ஜமான் 78, முகமது ரிஸ்வான் நாட் அவுட்டாக 51 ரன் அடித்தனர்.
48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது. பாபர் அசாம் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் 83 இன்னிங்ஸ், 807 நாட்களுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி உள்ளார். ஒருநாள் போட்டியில் இது அவருக்கு 20வது சதமாகும். கடைசி போட்டி நாளை நடக்கிறது.


