பெஷாவர்: பாகிஸ்தானில் துணை ராணுவ படை தலைமையகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பெஷாவரில் துணை ராணுவ தலைமையகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை தீவிரவாதிகள் கும்பல் முக்கிய நுழைவு வாயில் பகுதியை அடைந்துள்ளது. ஒரு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்திய நிலையில் மற்ற 2 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்துள்ளனர். வாகன நிறுத்துமிடத்தை குறிவைத்து அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதல்களில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினார்கள். மேலும் 12 பேர் காயமடைந்தனர். மேலும் வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் ஜமாத்-உல் அஹ்ரர் பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
+
Advertisement



