பெய்ஜிங்: சீனா நேற்று தனது சொந்த செயற்கைக்கோள்களான ஏர்சாட் 03 மற்றும் 04 ஆகியவற்றை விண்ணில் செலுத்தியது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களுடன் பாகிஸ்தானின் தொலை உணர்வு செயற்கை கோளான பிஆர்எஸ்எஸ்-2 சேர்த்து மூன்று செயற்கைகோள்களாக லிஜியன் 1ஒய் 8 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு சீனா மூலமாக ஏவப்பட்ட மூன்றாவது பாகிஸ்தான் செயற்கைக்கோள் இதுவாகும். செயற்கைக்கோள்கள் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
+
Advertisement