ஆப்கானிஸ்தான்: பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பின்னர் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தர்ஸ புல்லில் நடந்து வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தலிபான்கள் அறிவித்தனர்.

