பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் மீது ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார்
மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 2 பேர் மீது ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் புகார் அளித்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஹரீஷ் ராஃப், பர்ஹான் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பி.சி.சி.ஐ. புகார் அளித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.