வாஷிங்டன்: பாகிஸ்தானும் சீனாவும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகின்றன என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகார் தெரிவித்துள்ளார். ரஷ்யா, வடகொரியா உள்பட பல நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக டிரம்ப் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அணுகுண்டு சோதனைகளை நடத்தினாலும் சீனாவோ, ரஷ்யாவோ அதை பகிரங்கமாக தெரிவிப்பதில்லை. வெளிப்படையான அணுகுண்டு சோதனைகளை மேற்கொள்ள அண்மையில் அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகத்தை 150 முறை அழிக்கக் கூடிய அளவு அமெரிக்காவிடம் அணுகுண்டுகள் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
+
Advertisement
