இஸ்லாமாபாத்: ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 80வது கூட்டம் நியூயார்க் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் வாஷிங்டன்னுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளன. வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் ஷெபாஸ் ஷெரீஃப், அமெரிக்கா பாகிஸ்தான் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
+
Advertisement