அகமதாபாத்: பீகாரை சேர்ந்தவர் அஜய்குமார்சிங்(47). முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 2022ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு கோவாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ராணுவத்தில் இருந்த போது நாகலாந்தில் பணிபுரிந்தார். அப்போது அங்கிதா சர்மா பாகிஸ்தான் உளவு துறை பெண் அதிகாரி அஜய்குமார்சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த பெண் அதிகாரியின் பேச்சில் மயங்கிய அஜய்குமார் சிங் பல்வேறு ராணுவம் தொடர்பான தகவல்கள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்களை பாகிஸ்தான் பெண் உளவு அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். அதே போல் உபியை சேர்ந்த ரஷ்மணி பால்(35) என்ற பெண் யூனியன் பிரதேசமான தாமனில் வசித்து வந்தார். அங்கு இருந்த போது பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகளான அப்துல் சத்தார்,காலித் ஆகியோருடன் சமூக வலைதளத்தின் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிரியா தாக்கூர் என்ற போலி அடையாளத்தை ஏற்படுத்திய ரஷ்மணி பால் ராணுவ அதிகாரிகளின் செல் போன் எண்களை பாகிஸ்தான் உளவு ஏஜென்டுகளுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement

