நெல் கொள்முதலை விரைவுபடுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறுவை சாகுபடி என்பது சுமார் 6 லட்சம் ஏக்கர் அளவில் நடந்துள்ளது. நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்வதற்கான திட்டமிடுதல் இல்லாததால், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நெல் கொள்முதலை விரைவு படுத்திட சிறப்பு கண்காணிப்பு குழு அமைத்திட வேண்டும். தற்காலிக சேமிப்பு கிடங்குகளை அவசரமாக ஏற்பாடு செய்து உடனுக்குடன் கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக சேமித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.