சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2405க்கும், சன்ன ரக நெல் ரூ.2450க்கும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ரூ.95 உயர்த்தப்பட்டு, முறையே ரூ.2500, ரூ.2545 வீதம் கொள்முதல் செய்யப்படும் போதிலும், அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடையவில்லை. தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படும் சாதாரண ரக நெல்லுக்கு ஒன்றிய அரசு ரூ.2369 விலை வழங்குகிறது. அத்துடன் தமிழக அரசு ரூ.131 ஊக்கத் தொகையாக வழங்குகிறது. ஆனால், தமிழக அரசு பணியாளர்கள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.275 வீதம் கையூட்டாக வசூலித்து கொள்கின்றனர் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கொடுக்காவிட்டால், ஈரப்பதம் அதிகமாக உள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி நெல்லை கொள்முதல் செய்ய பணியாளர்கள் மறுத்து விடுவார்கள். இதனால் இப்போது நெல்லை தனியார் வணிகர்களிடம் விற்க தயாராகி விட்டனர். இதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement