நெல் மூட்டைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : நெல் மூட்டைகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். நெல்மணிகள் உலைக்குச் செல்லும் வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விவசாயிகளிடம் இருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.