தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் குழு அமைப்பு!!
சென்னை: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம்பெற்றுள்ளனர். பருவமழையால் மழையில் நெல் நனைந்துள்ளதால் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதை அடுத்து 3 குழுக்களை ஒன்றிய அரசு அனுப்பியது.