நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி
சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதில் தெரிவித்து பேசிய அவர்,
எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் பதிலடி
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் 700 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் இருந்தது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் தற்போது 1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
விவசாயிகளிடம் உடனுக்குடன் நெல் கொள்முதல்
திராவிட மாடல் ஆட்சியில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் நாற்று நடும் நிலைக்கு நெல் முளைத்திருந்தது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்
நெல் மூட்டைகள் பாதுகாப்பாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மழை பெய்வதால் வெளியே நெல் மூட்டைகளை வைக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் உற்பத்தி
திராவிட மாடல் ஆட்சியில் 5 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்
மழையால் சம்பா சாகுபடி 16,000 ஹெக்டர் பரப்பு நீரில் மூழ்கி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும். 33%க்கு மேல் பயிர் பாதிப்பு இருந்தால் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.