நெல்லை: நெல்லை அருகே சாலையின் குறுக்கே மாடு பாய்ந்ததால் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 14 பயணிகள் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து அதிகாலை 4 மணிக்கு நெல்லை நோக்கி அரசு பேருந்து பயணிகளுடன் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தது. இந்த பேருந்து நெல்லை அருகில் உள்ள கொங்கராயக்குறிச்சி பகுதியில் வந்தபோது, திடீரென ஒரு மாடு குறுக்கே வந்துள்ளது. மாட்டை கண்டதும் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் வடிவேலு என்ற டிரைவர் திடீரென பிரேக்கை பிடித்துள்ளார், பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
பேருந்தில் இருந்த 20க்கும் மேலான பயணிகள் அந்த விபத்தில் சிக்கினார். பேருந்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவிர்த்து கொண்டு இருந்தபோது அவர்களை அக்கம்பக்கத்தினர் மற்றும் பெருமாள்புரம் காவல் துறையினர் உடனடியாக வந்து மீட்டனர். இதில் 14 பயணிகளுக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டு இருந்தது. தொடர்ந்து 14 பயணிகளும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அங்க அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.