அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி கருவல்வாடிப்புதூரை சேர்ந்தவர் அசோக்குமார் (36). தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பயிற்சிக்காக ஆக்சிஜன் சிலிண்டரை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
இவரது தாய் நேற்று முன்தினம் மளிகைப்பொருட்கள் வாங்க ஈரோடு சென்று விட்டு, இரவு வீடு திரும்பிய போது வீட்டில் ஆக்சிஜன் சிலிண்டரின் டியூப்பை மூக்கில் சொருகியவாறு அசோக்குமார் மயங்கி கிடந்தார். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கவே, அவர்கள் வந்து பரிசோதித்து அசோக்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் மர்மச்சாவு என வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.