Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லண்டன்: சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் 'பெரியார் உலகமயமாகிவிட்டார் என்பதற்கு உதாரணம்தான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் படம் திறப்பு. உலகம் முழுவதும் பயணம் செய்து சுயமரியாதை கருத்தை பரப்பியவர் பெரியார். சமூகத்துக்கான வாழ்வியல் தத்துவத்தை உலகத்துக்கு எடுத்துரைத்தவர். ஒரு இனத்துக்கே சுயமரியாதை உணர்வை ஊட்டியவர். பகுத்தறிவு, சமத்துவம், பெண்கள் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.