லாஸ்ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘அடலசென்ஸ்’. பிலிப் பரந்தினி இயக்கத்தில் நான்கு எபிசோடுகளில் இந்தத் தொடர் வெளியானது. ஒட்டுமொத்த தொடரும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. இந்தத் தொடரில் ஜேமி மில்லர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இங்கிலாந்தை சேர்ந்த 15 வயதான ஓவன் கூப்பர், தனது அசாத்திய நடிப்பால் தனி முத்திரை பதித்தார். பள்ளி மாணவனாக இருந்தபோது சக தோழியை கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான பின்னர், ஜேமி மில்லரின் வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பதை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான எம்மி விருதுகள் வழங்கும் விழாவில், அடலசென்ஸ் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான விருது ஓவன் கூப்பருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இளம் வயதில் எம்மி விருதை வென்றவர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் பெற்றுள்ளார்.
+
Advertisement