திண்டுக்கல்: ஓட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஓட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டன்சத்திரம், கப்பல்பட்டி, கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, ஓடைப்பட்டியில் அதிக அளவில் முருங்கை விளைகிறது. கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ முருங்கை ரூ.50க்கு விற்ற நிலையில், தற்போது முருங்கை சீசன் குறைய தொடங்கிவிட்டது. இனிவரும் நாட்களில் முருங்கை விலை மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement
