போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாளில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியம் பதிவு உத்தரவு
மதுரை: போக்சோ வழக்கு தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், விஜயகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மிகக் குறைந்த வழக்குகளைத் தவிர, போக்சோ வழக்குகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரிக்கத் தவறிவிட்டனர் என்பது தெரியவருகிறது.
போக்சோ நீதிமன்ற நீதிபதிகளுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை வழங்க மாநில நீதித்துறை பயிற்சி மைய இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில், குற்றப்பத்திரிகை தாக்கலான 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியத்தைப் பதிவு செய்வது, மின்னணு முறையில் தாக்கலான குற்றப்பத்திரிகைகள் உட்பட குற்றப்பத்திரிகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள், தேவையற்ற தாமதமின்றி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.