சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் 4 ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுவடைய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் மேற்கு வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சற்று வேகம் குறைந்தது.
சென்னையில் இருந்து 770 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் கடலில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம் கலிங்கபட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் 4 ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும், நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
