சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 3ம் தேதி மேற்கண்ட மாவட்டங்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, மாவட்டங்கள் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மிதமான மழை பெய்யும்.
Advertisement