மதுரை: ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேவர் நினைவிடத்தில் சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்தித்துப் பேசினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி; தவெகவுடன் அதிமுகவும் அதிமுகவுடன் தவெகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. கூட்டணி தொடர்பாக தவெகவினர் எங்களுடன் பேசவில்லை; நாங்களும் தவெகவினருடன் பேசவில்லை
எனது கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடியசைத்ததாலேயே பிள்ளையார் சுழி போடப்பட்டதாக கூறினேன். பிள்ளையார் சுழி போடப்பட்டதாக நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. தவெக தொண்டர்கள் அவர்களது கட்சிக் கொடியே காட்டினர். கூட்டணி குறித்து அந்தந்த கட்சி தலைவர்கள்தான் முடிவு எடுப்பர். 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து பேசுவது தேவையற்றது. ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது.
ஓ.பி.எஸ்., டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு ஏற்கனவே திட்டமிட்டதுதான். எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. துரோகிகளால்தான் அதிமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்குவதற்கு எந்த தயக்கமும் இல்லை. அதிமுகவுக்குள் இருந்து கொண்டே சிலர் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதால் ஆட்சிக்கு வர முடியவில்லை. தலைமையின் கருத்துக்கு கட்டுப்படவில்லை யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளடி வேலைகளால்தான் 2021ல் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
