நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
சென்னை: நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் 700 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் என இருந்தது. திராவிட மாடல் ஆட்சியில் தற்போது 1,000 நெல் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.