எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர்களை குறைக்கவே எஸ்ஐஆர்: தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ் குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரபல தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ்,‘‘2026ம் ஆண்டு மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜ எந்த வாய்ப்பையும் விட்டுவைக்காது. வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறையை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறது.
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறைக்கு பீகாரை தேர்தல் ஆணையம் சோதனை களமாக பயன்படுத்தியது. இப்போது மேற்கு வங்கத்தில் பாஜ முழுவீச்சில் செல்வதற்கு விரும்புகின்றது. மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த காலங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறிய பிறகு, பாஜ இப்போது வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் செயல்முறையை பயன்படுத்தி அத்தகைய மாநிலங்களில் வாக்காளர்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
எஸ்ஐஆர் என்பது 2002ம் ஆண்டை முறையான வாக்காளர்களைாக பதிவு செய்வதற்கான காலக்கெடுவாக கொண்டு முந்தைய தேர்தல்களில் வாக்களித்த இந்தியாவின் வயது முதிர்ந்த வாக்காளர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி வாக்குரிமையை பறிப்பதை நோக்கமாக கொண்ட நடவடிக்கையாகும்” என்றார்.


