கேரளா: எதிர்க்கட்சியினரை கீழ்த்தரமாக விமர்சித்த பாஜக எம்.பி சுரேஷ் கோபியின் பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குகள் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய குற்றசாட்டுகள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் வாக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குற்றசாட்டை எழுப்பி இருந்தனர்.
இத்தகைய குற்றச்சாட்டிற்கு பாஜக வேட்பாளரும், எம்.பியுமான சுரேஷ்கோபி பொதுவெளியில் பேசாமல் தவிர்த்திருந்தார். இந்த நிலையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சக்தன் தம்புரான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்திருந்தார். மாலை அணிவிப்பு முடித்ததும் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றச்சாட்டுகளுக்கு பதில் தெரிவித்தார். கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகளை வானரங்கள் (குரங்குகள்) என்ற கடுமையான சொல்லை பயன்படுத்தி அவர் விமர்சித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க மாட்டேன். தேவைப்பட்டால் நீங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பதிலை பெற்று கொளுங்கள் என்று தெரிவித்திருந்தார். இத்தகைய பதில் கேரளாவில் எதிர்கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற தேர்தலில் நடைபெற்ற வாக்கு முறைகேடுகளை எதிர்க்கட்சிகள் என்னிடத்தில் கேட்க கூடாது. இதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு உரிய பதிலை பெற்று கொள்ளுங்கள் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.