Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்

சென்னை: உலகம் முழுவதிலும் இருந்து 4000 கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மாநாட்டை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்.இந்திய இன்ட்ராகுலர் இம்ப்ளாண்ட் மற்றும் ரிப்ராக்டிவ் சொசைட்டி (ஐஐஆர்எஸ்ஐ) சார்பில் சென்னையில் 2 நாட்கள் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொள்கிறார்கள்.

இந்த மாநாட்டை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து டாக்டர் சைரஸ் மேத்தா, டாக்டர் நர்மதா சர்மா ஆகியோர் எழுதிய ஐஐஆர்எஸ்ஐ நூலை அவர் வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஐஐஆர்எஸ்ஐ தலைவர் டாக்டர் சதான்சு மாதூர் வரவேற்று பேசினார். ஐஐஆர்எஸ்ஐயின் பொதுச் செயலாளரும் டாக்டர் அகர்வால் குழும கண் மருத்துவமனைகளின் தலைவருமான பேராசிரியர் அமர் அகர்வால் ஐஐஆர்எஸ்ஐ குறித்து விளக்கி கூறினார்.

அவர் பேசும்போது, இந்தியா மற்றும் வெளிநாடு கண் மருத்துவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த இந்த மாநாடு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த மாநாட்டில் நேரடி அறுவை சிகிச்சை அமர்வுகள் ஒளிபரப்பப்படவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் கண்புரை மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும். இந்த மாநாட்டுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னணி கண் மருத்துவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை சென்னையில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார் என்றார்.

தொடக்க விழாவில் கண் மருத்துவ நிபுணர்கள் அமெரிக்காவை சேர்ந்த டாக்ட் நிக்கோலே பிராம், அர்ஜென்டினா டாக்டர் அன்ட்ரெஸ் பெனாட்டி உள்ளிட்ட 17 கண் மருத்துவ நிபுணர்களுக்கு சர்வதேச விருதுகளையும் ஐஐஆர்எஸ்ஐ தலைவர் டாக்டர் சதான்சு மாத்தூர், டாக்டர் ரோஹித் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 5 மருத்துவ நிபுணர்களுக்கு இந்திய விருதுகளையும், அரியானாவை சேர்ந்த டாக்டர் இந்தர் மோகன் ரஸ்தோஹி, ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரிஷி ஸ்வரூப் ஆகியோருக்கு ஐஐஆர்எஸ்ஐ தங்க பதக்கங்களையும் பொறுப்பு தலைமை நீதிபதி வழங்கி பாராட்டினார். முடிவில் டாக்டர் மோகன் ராஜன் நன்றி கூறினார்.