ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்: இந்திய விமானப்படை தளபதி பேட்டி
ஆபரேஷன் சிந்தூரின்போது, பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்திய விமான படையின் 93-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
*ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு தான் மேற்கொள்ளும் முதல் செய்தியாளர் சந்திப்பு என குறிப்பிட்டார்.
*ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படைகளுக்கு தெளிவான அறிவுரை கொடுக்கப்பட்டது.
*இந்தியா தன்னுடைய இலக்கை எட்டியதால் பல்வேறு நலனை கருத்தில் கொண்டு அவர்களே போர் நிறுத்தம் கோரவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளியது என்று சுட்டி காட்டினார்.
*மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது கலத்தில் இருந்த F16 போர் விமானங்கள் 5, வானத்தில் இருந்த அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்கள் 5 என ஒட்டு மொத்தமாக 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.
*பல விமானங்கள், விமான படைத்தளங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
*பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் இந்தியாவினுடைய F 4 ரக அமைப்புக்கு மிக பெரிய பங்கு உள்ளது.
*பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும், எதிரி படைக்குள் இந்திய படைகள் சுமார் 300 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டார்.
*பாகிஸ்தான் இந்தியாவை சேர்ந்த 15 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தொடர்ந்து கூறி வருகிறது.
*அவர்கள் நினைத்தாள் நினைத்துகொள்ளட்டும். அதனை பற்றி தங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை குறைந்தபட்சம் தங்கள் நாட்டு மக்களை திருப்திபடுத்த அவர்களும் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டும் அல்லவா என்று குறிப்பிட்டார்.
*நாம் இத்தனை ஆதாரங்களை சமர்ப்பிக்கிறோம். அப்படி பாகிஸ்தான் ஏதாவது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தி இருந்தால் அதற்கான ஒரு ஆதாரத்தையாவது இதுவரை அவர்கள் காண்பித்திருக்கிறார்களா எனவும் விமானப்படை தளபதி கேள்வி எழுப்பினார்.