ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பிகோனியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களின் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் போட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பல்வேறு வகையான தாவரங்கள், மலர் செடிகள், மரங்கள், பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச் செடிகள் ஆகியவைகளை கண்டு ரசித்துச் செல்கின்றனர். தற்போது 2ம் சீசனுக்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், பூங்காவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மலர்கள் இன்றி பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர் தொட்டிகள் கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம், பிகோனியா போன்ற மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.