உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (38). தனியார் நிறுவனத்தில் தற்காலிக டிரைவர். மனைவி ரூபாவதி (30). 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்தார். பின்னர் அதற்கு முழுமையாக அடிமையானார். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி விளையாடியுள்ளார்.
கடனை திருப்பி செலுத்த முடியாத அளவு நெருக்கடி ஏற்பட்டதால் மன உளைச்சலில், சின்னச்சாமி, நேற்று முன்தினம் வீட்டைவிட்டு ெவளியே சென்று, இரவு 7.10 மணியளவில் உசிலம்பட்டி சில்லாம்பட்டி அருகே போடியில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.