புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜரானார். ஆன்லைனின் ஒன்எக்ஸ் பெட் என்ற சட்டவிரோத சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து ராபின் உத்தப்பா நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த சில வாரங்களாக முன்னாள் திரிணாமுல் எம்பி மற்றும் நடிகர் மிமி சக்ரவர்த்தி, நடிகர் அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
+
Advertisement