சென்னை: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் தாமதத்தை தவிர்க்க ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வதை அமல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் அறிக்கையை நீதிமன்றம், போலீசார் மட்டுமே பதிவிறக்கம் செய்யலாம். பாதுகாப்பு கருதி இறந்தவர்களின் குடும்பத்தினர் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
+
Advertisement