ஐதராபாத்: தெலங்கானாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய வழக்கில், நடிகை மஞ்சு லட்சுமி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். ஏற்கெனவே நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் விசாரணைக்கு முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, நடிகை மஞ்சு லட்சுமி நேற்று ஐதராபாத்தில் உள்ள பாஷீர்பாக்கில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜாரானார்.
+
Advertisement