ஆன்லைன் மூலம் முன்பதிவு ஆதார் பதிவர்களுக்கு மட்டுமே முதல் 15 நிமிடம் ரயில் டிக்கெட்: அக்டோபர் 1 முதல் அமல்
புதுடெல்லி: ஆன்லைன் தட்கல் முன்பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயம் என்பது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் பதிவு செய்த பயனர்கள் தான் முதல் 15 நிமிடம் தட்கல் முன்பதிவு செய்ய முடியும். தற்போது இதே திட்டத்தை தட்கல் மட்டுமல்லாமல் அனைத்து ரயில் முன்பதிவுகளுக்கும் ரயில்வே விரிவுபடுத்தி உள்ளது. வரும் அக்.1 முதல், பொது முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 15 நிமிடங்களுக்குப் பிறகு, அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள் ஆன்லைன் முன்பதிவுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதே சமயம் டிக்கெட் கவுண்டர்கள் மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பொது முன்பதிவு திறக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டிலும் எந்த மாற்றமும் இருக்காது.