டெல்லி : ஒன்றிய அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதியும், நீதிமன்ற நேரத்தை சேமிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்குகளை மாற்ற வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
+
Advertisement