முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!!
மும்பை : முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
