ஒரு நாள் அடையாள போராட்டம் அரசு ஊழியர்களின் வருகை பதிவேடு குறித்து தெரிவிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு சுற்றறிக்கை
சென்னை: அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், துறை தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்கள் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் தங்களது உறுப்பினர்களை ஒரே நாளில் விடுப்பு எடுக்க அறிவுறுத்தக் கூடாது. இது சட்டவிதிக்கு விரோதமான நடவடிக்கை என அரசு எச்சரித்துள்ளது. அதன்படி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை விவரங்களை இன்று காலை 10.15 மணிக்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும். மனிதவள மேலாண்மை துறைக்கும் parjsar@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களின் வருகை நிலை பற்றிய விவரங்களையும் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
தலைமை செயலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் வருகை விவரங்கள் காலை 10.30 மணிக்குள் மனிதவள மேலாண்மை துறைக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் தலைமை செயலாளருக்கு சமர்ப்பிக்கப்படும். அதிகாரிகள் தவறாமல், நேரத்திற்கு முன்பாக தகவல்களை அனுப்பி, அரசுக்கு முழுமையான வருகை நிலை பற்றிய படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சேவை வழங்கும் அரசுப் பணியாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.