மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாமரைக்குளம் வடகரை செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன் செல்வகுமார். இருவரும் சேர்ந்து கர்த்தநாதபுரம் மாதா கோவில்தெரு பின்புறத்தில் உள்ள வயல் வெளியில் கடந்த 30 வருடங்களாக நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் ஆலை உரிமையாளர் விஜயாவின் இளைய மகன் சதீஷ் குமார் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி அருண்குமார் (19) ஆகிய இருவரும் நாட்டுவெடிகளை தயாரிப்பதற்காக வெடி மருந்துகளை கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி மருந்துகள் வெடித்ததில் அந்த கட்டிடமே உருக்குலைந்து போனது.இதில் சதீஷ்குமார் பலியானார்.