ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் ரூ.25 கோடி பெறும் அதிர்ஷ்டசாலி யார்? கொச்சியில் விற்பனையான டிக்கெட்டுக்கு ஜாக்பாட்
திருவனந்தபுரம்: கேரள அரசு சார்பில் இவ்வருடம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரூ. 25 கோடிக்கான பம்பர் லாட்டரி கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. மொத்தம் 75 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டதாகவும், இவை அனைத்தும் விற்றுவிட்டதாகவும் லாட்டரித் துறை இயக்குனரகம் தெரிவித்தது. இந்நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதில் முதல் பரிசு TH 577825 என்ற டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த டிக்கெட் கொச்சி நெட்டூரில் விற்பனையானது தெரியவந்துள்ளது. ஆனால் அதை வாங்கி ரூ. 25 கோடி பெற உள்ள அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று இதுவரை தெரியவில்லை. இரண்டாவது பரிசு ரூ. 1 கோடி தலா 20 பேருக்கும், மூன்றாவது பரிசு ரூ.50 லட்சம் தலா 20 பேருக்கும், நான்காவது பரிசு ரூ.5 லட்சம் தலா 10 பேருக்கும், ஐந்தாவது பரிசு ரூ 2 லட்சம் தலா 10 பேருக்கும் கிடைக்கும்.