சென்னை: ஜாக்டோ-ஜியோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ், சண்முகநாதன், ஆகியோர் கொண்ட கூட்டுத் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கோரிக்கை அட்டை அணிந்து அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, 18ம் தேதி உயர் மட்டக் குழு கூட்டத்தை நடத்துவது 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் போராட்டத்தின் அவசியம் குறித்து மாவட்ட அளவில் ஜீப்தாதா பிரசார இயக்கம் நடத்துவது என்றும், நவம்பர் 18ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement