Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு: போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டது

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வருவதை தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம்.

அதன்படி சென்னை, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் 1800 425 6151, வடக்கு, இணைப்போக்குவரத்து ஆணையரகம் 97893 69634, தெற்கு, இணைப்போக்குவரத்து ஆணையரகம் 93613 41926, மதுரை, இணைப்போக்குவரத்து ஆணையரகம் 90953 66394, கோவை, இணைப்போக்குவரத்து ஆணையரகம், 93848 08302, விழுப்புரம், துணைப்போக்குவரத்து ஆணையரகம் 96773 98825, வேலூர், துணைப்போக்குவரத்து ஆணையரகம் 98400 23011, சேலம், துணைப்போக்குவரத்து ஆணையரகம் 78456 36423, ஈரோடு, துணைப்போக்குவரத்து ஆணையரகம் 99949 47830, திருச்சி, துணைப்போக்குவரத்து ஆணையரகம் 90660 32343, விருதுநகர், துணைப்போக்குவரத்து ஆணையரகம் 90257 23800, நெல்லை, துணைப்போக்குவரத்து ஆணையரகம் 96981 18011, தஞ்சாவூர், துணைப்போக்குவரத்து ஆணையரகம் 95850 20865 புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.