பல்லடம்: மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி பேருந்து கோவையில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை சென்று கொண்டு இருந்தது. பேருந்தை டிரைவர் சரவணன் (28) என்பவர் ஓட்டி வந்தார். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் வந்தபோது அதிகாலை 2 மணிக்கு பேருந்தின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. சுதாரித்து கொண்ட டிரைவர் சரவணன், பேருந்தை சாலையோரமாக நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். தீபிடித்து இருந்ததை தொடர்ந்து பேருந்தில் உறங்கி கொண்டு இருந்த 15 பயணிகளை எழுப்பி இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வைத்தார். தகவலறிந்து பல்லடம் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பேருந்தின் சீட் பகுதி முழுவதும் கருகி சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
