Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிகப்படியான கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.