Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எண்ணெய் வழியும் சருமத்திற்கு 8 ப்ளிச் டிப்ஸ்!

முகமெல்லாம் எண்ணெய்க் காடா இருக்கே என்று தினமும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பவரா நீங்கள்? என்ன செய்து பார்த்தும் எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக்கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. கொஞ்சம் கீழே சொல்லப்போற விஷயங்களை எல்லாம் முயற்சிசெய்து பாருங்க.

*தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கிவிடும்.

*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் மோரைப் பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவிவந்தால் எண்ணெய்த் தன்மை

குறையும்.

*சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.

*வெள்ளரிக் காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச்சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக் காணப்படும்.

*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்கு பதிலாக கடலைமாவைப் பயன்படுத்துங்கள். எண்ணெய்த் தன்மை குறைவதோடு, முகமும்

பளபளப்பாகும்.

*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய் சுரப்பது குறைந்து விடும்.

*வெள்ளரிச் சாறு, எலுமிச்சைச் சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் எண்ணெய்த்தன்மை நன்கு குறையும்.

- கவிதாபாலாஜிகணேஷ்