Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல்!

டெல்லி: ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிய கட்டண மாற்றம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து யு.ஐ.டி.ஏ.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால் முகவரி மாற்ற சேவைக்கான கட்டணம் தற்போது உள்ள ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படுகிறது.

ஆதாரில் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிற சேவைக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் அது நேரடியாக மக்களை பாதிக்கக்கூடும் என்றாலும், உயர்வு மிகக்குறைந்த அளவில் மட்டுமே உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.