ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் இன்று ரூ.30 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடைபெறுகிறது. அதன்படி இன்று நடந்த சந்தைக்கு வழக்கம்போல் ஆடுகள் வரத்து இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆடுகளின் வரத்து அதிகரித்து விற்பனை படு ஜோராக நடந்தது. ஆனால், கடந்த வாரம் ஆடுகளின் வரத்து குறைந்ததால் வியாபாரம் சற்று மந்தமாக இருந்தது. ஆனால் இன்று நடந்த சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆடுகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு ஜோடி ஆடு ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், புரட்டாசி மாதத்திற்கு முன்பு ஆடி, ஆவணி போன்ற மாதங்களில் ஆடுகளின் வரத்து அதிகரித்து வியாபாரமும் நன்றாக இருக்கும். கடந்த வாரம் வியாபாரம் சுமாராக. தற்போது புரட்டாசி மாதம் நெருங்குவதால் இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஆடுகளின் விலை அதிகரித்து ஒட்டுமொத்தமாக ரு.30 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என்றனர்.